Tuesday 7th of May 2024 02:14:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
இறந்த உடல்களை இரணை தீவில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

இறந்த உடல்களை இரணை தீவில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!


கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின் பங்குதந்தை மடுத்தீன் பத்தினாதர் அடிகளார் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.

குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் மெசிடோ நிறுவனத்தினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததுடன் அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் பின்னர் இரணை மாதா நகர் பகுதியில் இருந்து படகு மூலம் இரணை தீவுக்கு பொது மக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்ற போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து போராட்ட குழுவினரால் பூநகரி பிரதேச செயலாளர் ,யாழ்மறைமாவட்ட ஆயர் ,யாழ் மனித உரிமை ஆணைகுழு காரியாலங்களுக்குரிய மகஜர் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE